வியாழன், 11 டிசம்பர், 2014

பாலஸ்தீன அமைச்சரை அடித்தே கொன்ற இஸ்ரேல் ராணுவம்! வீடியோ இணைப்பு

ஜெருசலம்: பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் அந்த நாட்டு அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரை பகுதியில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்றுவரும் இரு நாட்டவர்களுக்கும் இடையேயான போராட்டத்தை பார்வையிட பாலஸ்தீன அமைச்சர் (துறை ஒதுக்கப்படவில்லை)ஜையாத் அபு இன் இன்று அங்கு சென்றிருந்தார். அப்போது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் அவரை வரவிடாமல் தடுத்தனர்.இதையும் மீறி அப்பகுதிக்கு செல்ல முயன்ற அமைச்சரை இஸ்ரேல் ராணுவத்தினர் பிடித்து தள்ளி அடித்து உதைத்தனர். துப்பாக்கி மறு முனையால் அமைச்சரின் நெஞ்சில் குத்தினர். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அமைச்சர் ஜையாத் அபு இன், ஆம்புலன்ஸ் மூலம் ரமலா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே அமைச்சர் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு நடுவேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த கொலையை பாலஸ்தீன அதிபர் மெகமூத் அப்பாஸ் கடுமையாக கண்டித்துள்ளார். இதனிடையே, ரஷ்ய நாட்டு தொலைக்காட்சி சேனல், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக