பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை ரங்கபிள்ளைமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மகேந்திரன்(27). சம்பவத்தன்று இவர் தனது தாய் கன்னியம்மாள்(43) என்பவருடன் ஒரு மொபட்டில் சிதம்பரம்-கடலூர் சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதன், 10 டிசம்பர், 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)









0 கருத்துகள்:
கருத்துரையிடுக