புதன், 17 டிசம்பர், 2014

பருவ மழை உச்சம்:பரங்கிப்பேட்டையில் பலத்த மழை

பரங்கிப்பேட்டை:பருவ மழை கடைசி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் பரங்கிப்பேட்டையில் பலத்த மழை பெய்து வருகிறது பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை முதல் இரவு 8 மணிவரை மழை பெய்தது. பின்னர் இடைவெளிவிட்டு நள்ளிரவு 1மணிக்கு மேல்  விடிய, விடிய மழை கொட்டியது. இன்று காலையிலும் மழை நீடித்தது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.இரவு பெய்த கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது ..தமிழகத்திலே அதிக பட்சமாக பரங்கிப்பேட்டையில் தான் அதிக மழை 16 செ மீ  பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..










பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சாமியார் பேட்டை புதுக்குப்பம் சின்னூர் புதுப்பேட்டை மடவபள்ளம்  முடசல்ஓடை, அண்ணங்கோவில், எம்.ஜி.ஆர். திட்டு, முடுக்குதுறை, பில்லுமேடு உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 2–வது நாளாக இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக