செவ்வாய், 18 நவம்பர், 2014

பரங்கிப்பேட்டையில் நடந்த இலவச மருத்துவ முகாம்


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. அரிமா சங்கம் மற்றும் கடலூர் ஸ்ரீ அன்னை ஆயுர்வேதா அண்ட் பிசியோ தெரபி வெல்னஸ் சென்டர் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் நடராஜன், கவுன்சிலர் அருள்முருகன் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முகாமில் மூட்டுவலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, ரத்தக்கொதிப்பு, தூக்கமின்மை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர் சுஜாஸ்ரீ தலைமையிலான டாக்டர் குழுவினர்கள் சிகிச்சை அளித்தனர். கவுன்சிலர்கள் காஜா கமால், கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக