கடலூர்:கடலூர்-புதுச்சேரி புதிய ரயில் பாதையை தேசிய நெடுஞ்சாலை எண் 45ஏ அருகில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர்-புதுச்சேரி-மகாபலிபுரம் வழியாக சென்னைக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை ரயில்வே துறை கடந்த 2007ஆம் ஆண்டு அறிவித்தது. கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம், தற்போது உத்தேச வழித் தடத்தை ரயில்வே துறை இறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி கடலூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து, விழுப்புரம் செல்லும் ரயில் பாதையில், நெல்லிக்குப்பம் அருகே வரக்கால்பட்டு ரயில் நிலையத்திலிருந்து வலது பக்கம் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையை கடந்து பாகூர் வழியாக புதுச்சேரிக்கு ரயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரயில் பாதைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரயில்வே வளர்ச்சிக்கான மக்கள் அமைப்பு நிர்வாகிகள் சிவசங்கரன், நிஜாமுதின், ஏழுமலை ஆகியோர், கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அந்த மனுவில், ரயில்வே துறை தயாரித்துள்ள உத்தசே ரயில் பாதையால் கடலூர், புதுச்சேரி மக்களுக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இதற்கு ப்பதிலாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், கண்ணியகோவில், ரெட்டிச்சாவடி, அபிஷேகபாக்கம் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 45ஏ அருகில் புதிய ரயில் பாதையை அமைக்க வேண்டும்.
செம்மண்டலம் பகுதியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் தான் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் இங்கு கரும்பு ஆராய்ச்சி பண்ணை அருகே ரயில் நிலையம் அமைத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பாக விருத்தாசலத்தில் இருந்து வரும் மக்களும் நேரடியாக ஆட்சியர் அலுவலகம் வந்து இறங்கிக் கொள்ளலாம்.
புதுச்சேரி அரசு தேசிய நெடுஞ்சாலை எண் 45ஏ அருகில் ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுக்க உள்ளதாகவும் ரயில்வே துறையிடம் தெரிவித்துள்ளது.
இதுபோல் தமிழக அரசும் தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே, நிலம் கையகப்படுத்திக் கொடுக்க முன்வந்தால் இந்த திட்டம் கடலூர் மாவட்டம், புதுச்சேரி மாநில மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். வரக்கால்பட்டு வழியாக செல்வதைக் காட்டிலும், இந்த வழியில் பயண தூரம் 7 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் குறையும்.
இதை கருத்தில் கொண்டு அரசு கவனத்துக்கு எடுத்துச் சென்று, ரயில்வே துறையிடம் செம்மண்டலம் வழியாக ரயில்பாதை அமைக்க ஆட்சியர் வலியுறுத்த வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக