கடலூர்: கடலூர் பஸ் நிலையத்தை விரிவுப்படுத்தி, பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் நகரின் மையப் பகுதியான திருப்பாதிரிப்புலியூரில், பஸ் நிலையம்
அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ள இந்த பஸ் நிலையத்துக்கு,
தமிழகத்தின் அனைத்து பெரிய நகரங்களில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கின்றன.
இங்கிருந்து, டவுன் பஸ்களும் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
தினந்தோறும், நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்துக்கு, ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இரவு, பகல் என எப்போதும் பிசியாக காட்சியளிக்கும், கடலூர் பஸ் நிலையம் இட நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
கடலூர் பஸ் நிலையம் பல்லாண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டபோது, எப்படி இருந்ததோ, அதுபோலவே, "பார்த்த கண்ணுக்கு பழுதில்லாமல்' தற்போதும் காட்சியளிக்கிறது. பஸ்களின் எண்ணிக்கையும், பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், பஸ் நிலையம் விரிவுப்படுத்தப்படாமல் உள்ளது. பஸ் நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் போடப்பட்டும், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பஸ் நிலைய வளாகத்துக்குள் பஸ்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லாததால், பஸ்களை உடனுக்குடன் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ் ஊழியர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. கடும் நெரிசல் காரணமாக, தாங்கள் ஏற வேண்டிய பஸ் எங்குள்ளது என, பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.
மேலும், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், பஸ் நிலையத்தில் இல்லை. பஸ் நிலையத்தில் உள்ள கட்டடங்களில் பெரும்பாலான இடங்களை, கடைக்காரர்களே ஆக்கிரமித்து, தங்களது பொருட்களை வைத்துள்ளனர். இதனால், கொளுத்தும் வெயிலில், பயணிகள் ஒதுங்கி நிற்பதற்குகூட இடமில்லை. வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.
வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்காருவதற்கு பெஞ்சு, சிமெண்ட் கட்டைகள்கூட கிடையாது. பஸ் நிலைய வளாகத்தில் குடிநீர் வசதியும் இல்லாததால், பயணிகள் மிகுந்த அவதியடைகின்றனர். எனவே, கடலூர் பஸ் நிலையத்தை விரிவுப்படுத்தி, நவீன வசதிகளுடன் புதுப்பிக்கவும், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக