பரங்கிப்பேட்டை:கடலில் போதுமான அளவிற்கு மீன்கள் கிடைக்காததால், கேரளா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் பரங்கிப்பேட்டையில் விற்பனை செய்யப்பட்டது.
பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுப்பேட்டை,
புதுக்குப்பம், பரங்கிப்பேட்டை, சின்னூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச்
சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக படகில்
கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடலில் பிடிக்கப்படும் மீன் வகைகள்
இங்கிருந்து தினமும் 20க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு
அனுப்பப்படுகிறது.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பரங்கிப்பேட்டை கடல் பகுதியில்
தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாக பரங்கிப்பேட்டை கடலில் போதுமான அறவிற்கு மீன்
கிடைக்காததால், மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி
வருகின்றனர்.இதனால் பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் நேற்று கேரளாவில் இருந்து கொண்டு
வரப்பட்ட சங்கரா மீன் 30 கிலோ கொண்ட பாக்ஸ் 2,000 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்டது.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக