வியாழன், 28 ஆகஸ்ட், 2014

மோசமான சாலைகளால் இந்தியாவில் நாள்தோறும் 20 சிறுவர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி:இந்தியாவில் உள்ள மோசமான சாலைகளால் நாள்தோறும் 20 சிறுவர்கள் பலியாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய குற்றப் பதிவுகள் கழகத்தில் உள்ள ஆவணங்கள் மூலம் இந்த அதிர்ச்சியான செய்தி வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள மோசமான சாலைகளால் நாள்தோறும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 பேர் இறப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இம்மாதிரியான விபத்துகள் நடப்பதற்கு முறையான விதிகளை கடைபிடிக்காதது தான் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையை மாற்றும் வகையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது அவசியமாகும். சீனாவில் உள்ளது போல் பேருந்து மற்றும் கார்களில் குழந்தைகளுக்கான இருக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான சீட் பெல்ட் ஆகியவற்றை ஒவ்வொரு பேருந்திலும் பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்நாட்டில் உள்ளது போல் குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று அறிவிக்க வேண்டும் என்று உயிர் காப்போம் அறக்கட்டளையின் தலைவரான பியூஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

இனியாவது இவ்விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக