கடலூர் :கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ.2.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்திடும் விவசாயிகளை ஊக்கப்படுத்திட குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை 100 சதவீத மானியத்தில் அரசாணையின் மூலம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்.
இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் டெல்டா வட்டங்களான பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு வகையான செயல்திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக டெல்டா பகுதிகளில் தொடர்ந்து 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி ஆழ்துளைக் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்திடும் விவசாயிகள் தங்கள் வயல்களின் நீர் ஆதாரத்தில் இருந்து வயலுக்கு நீரை விரைவாகவும், விரயம் இன்றியும் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக எளிதில் பயன்படுத்தக்கூடிய
13,500 குழாய்கள் ரூ.90 லட்சத்துக்கு டெல்டா பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உரிய பயனாளிகள் தேர்வு செய்து முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
ரசாயன உரமிட்டு மண்வளம் கெடுவதை தடுக்கவும், மேலும் உற்பத்தி செலவினை குறைக்கும் விதமாக ஏக்கருக்கு 8 பாக்கெட் உயிர் உரங்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் மண்வளத்தை பாதுகாப்பதன் மூலம் அதிக மகசூல் பெற வாய்ப்பு உள்ளது.
இதற்காக 12 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் ரூ.6 லட்சத்துக்கு இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன. புதிய தொழில்நுட்பமான திரவ உயிர் உரம் 12 ஆயிரம் ஏக்கருக்கு பயன் பெறும் வகையில் ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்துக்கு இடு பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
விவசாயிகள் தங்கள் மகசூலை பெருக்கி அதிக வருமானம் பெற தங்கள் வயல்களில் நுண்ணூட்ட சத்தின் குறைபாட்டை நீக்கிட டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணுரமும், 10 கிலோ சிங்க் சல்பேட்டும், 12 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.59 லட்சத்து 40 ஆயிரத்துக்கு நுண்ணூட்டச்சத்து மற்றும் சிங்க் சல்பேட்டும் வழங்கப்பட உள்ளது.
மேலும், மண்ணின் அமிலத் தன்மையை சரிசெய்து மண் வளத்தை அதிகப்படுத்தும் நோக்குடன் ஏக்கருக்கு 200 கிலோ வீதம் 4 ஆயிரம் ஏக்கருக்கு 800 மெட்ரிக் டன் ஜிப்சம் முழு மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமுதாய நாற்றங்கால் சாகுபடி தொழில்நுட்பம் முறையில் பாசன வசதி உள்ள விவசாயிகளின் மூலம் சமுதாய நாற்றங்கால் அமைத்திட ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசு முழு மானியம் வழங்க உள்ளது.
இதற்காக, ஆழ்குழாய் பாசன வசதி உள்ள டெல்டா பகுதி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு 60 ஏக்கரில் அதிக மகசூல் தரும் ரகங்களை கொண்டு சமுதாய நாற்றங்கால் உற்பத்தி செய்து அருகில் உள்ள கிராமங்களில் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் கூடுதலாக 6 ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சமுதாய நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றை நடவு செய்திட ஏதுவாக நெல் நடவு இயந்திரம் மற்றும் நெல் களை எடுக்கும் இயந்திரம் 20 விவசாய பண்ணை குழுக்கள் டெல்டா பகுதியில் அமைக்கப்பட்ட நவீன வேளாண் இயந்திரம் ரூ.46 லட்சம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு ரூ.2 கோடியே 73 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் சுமார் 21 ஆயிரத்து 500 விவசாயிகள் பயன் அடைய வாய்ப்பு உள்ளது.
இத்திட்டத்தில் அளிக்கப்படும் இடுபொருள்களை பயன்படுத்துவதால் குறுவை சாகுபடி பரப்பு கூடுதலாக சுமார் 6 ஆயிரம் ஏக்கர் சாகுபடிக்கு வருவதுடன் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு அனைத்து இடுபொருள்களையும் பெற்று பயன்படுத்தி மாவட்டத்தின் உணவு தானிய உற்பத்தியை அதிகரித்தும் தங்கள் வருவாயை கூடுதலாக பெற்று வாழ்வில் வளம்பெற வேண்டும் என அதில்
தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக