ஞாயிறு, 25 மே, 2014

பத்தாம் வகுப்பு: மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு 83.71% தேர்ச்சி

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 83.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம் ஆகிய கல்வி மாவட்டங்களை இணைத்து 19,131 மாணவர்கள், 19,254 மாணவிகள் என மொத்தம் 38,385 பேர் தேர்வு எழுதினர். இதில் 15,409 மாணவர்கள், 16,712 மாணவிகள் என மொத்தம் 32,121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 83.71 சதவீத தேர்ச்சியாகும். இதில் மாணவர்கள் 80.54 சதவீதமும், மாணவிகள் 86.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் சாதனை: கடலூர் மாவட்டத்தில் மாநில அளவில் 2-ஆம் இடத்தில் 4 பேர், 3-ஆம் இடத்தில் 6 பேர் என 10 பேர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டில் மாநில அளவில் முதல் இடம் உள்ளிட்ட முதல் மூன்று இடங்களை 7 பேர் பெற்றனர்.
தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம்: கடந்த ஆண்டில் 75.21 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் கடைசி இடத்தில் (32-வது இடம்) இருந்த கடலூர் மாவட்டம், இந்த ஆண்டில் விழுப்புரம், நாகப்பட்டினம், திருவண்ணாமலை மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி 29ஆம் இடத்தை பிடித்துள்ளது.
100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 285 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 209 அரசுப் பள்ளிகளும் அடங்கும். இதில் 26 அரசுப் பள்ளிகள் உள்பட 100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக