சென்னை:பாராளுமன்ற தேர்தலுக்கான 9 கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 7–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழ் நாடு உள்பட 12 மாநிலங்களில் வருகிற 24–ந்தேதி (வியாழக்கிழமை) 6–வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 24–ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, இடது சாரிகள் கட்சிகளிடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக 40 தொகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.
பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.40 தொகுதிகளிலும் உச்சக் கட்ட பிரசாரம் நடந்து வருகிறது.
ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும் என்பது விதியாகும். எனவே இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதன் பிறகு யாரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது.
மாலை 6 மணிக்கு பிறகு தொலைக்காட்சிகள் மூலமாகவும் பிரசாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல எஸ்.எம்.எஸ், இணையத்தளம் வழியாகவும் ஆதரவு திரட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு பிறகு வாக்காளர்களை கவரும் வகையில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்தினால் அது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 40 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவை இடையூறு இல்லாமல் நடத்தி முடிக்க, தேவையான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கான எல்லா பயிற்சிகளும் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தலை நடத்த அதிகாரிகள், ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு பூத்–சிலிப் வழங்கப்பட்டது. வீடு, வீடாக சென்று பூத்–சிலிப் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் ஓட்டுச்சாவடிகளில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டன. அந்த எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் கட்சி சின்னங்களை பொருத்தும் பணி நடந்து பெரும்பாலான தொகுதிகளில் அந்த பணி முடிந்தது.
இதற்கிடையே ஒவ்வொரு பகுதியிலும் பள்ளிக் கூடங்களில் ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் தூரத்தை கணக்கிட்டு தேர்தல் அதிகாரிகள் வெள்ளை பெயிண்டால் அடையாள மிட்டுள்ளனர்.
ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் எல்லையாக கருதி கட்டைகளால் தற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 24–ந்தேதி ஓட்டுப் பதிவு தினத்தன்று அந்த எல்லைக்குள் தேவையின்றி யாரும் நடமாட அனு மதிக்கப்பட மாட்டார்கள்.
அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 100 மீட்டர் தூரத்துக்குப் பிறகு பூத் அமைத்து கொள்ளலாம். அதில் 2 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. அந்த பூத்தில் குளிப்பானமோ, உணவு வகைகளோ வினியோகிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ள ஓட்டு போடப்படுவதை 100 சதவீதம் தடுக்க அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும், அந்த தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், இன்று மாலை 6 மணிக்குப் பிறகு வெளியேறிவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கட்சி வேட்பாளருக்காக பிரசாரம் செய்ய வந்தவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு தங்கள் சொந்த பகுதிக்கு சென்று விட வேண்டும். தேவை இல்லாமல் மற்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போய் தங்கி இருக்கக் கூடாது.
நாளை மாலை 6 மணிக்கு பிறகு தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் யாரும் தங்கி இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய அதிரடி சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், லாட்ஜுகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துவார்கள்.
மாலை பிரசாரம் ஓய்ந்த பிறகு நாளை (புதன்கிழமை) 40 தொகுதிகளிலும் முழு அமைதி நிலவ செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 40 தொகுதிகளிலும் நாளை முதல் துணை நிலை ராணுவத்தினரும், போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இதற்காக வட மாநிலங்களில் இருந்து துணை நிலை ராணுவத்தினர் தமிழகம் வந்து சேர்ந்து விட்டனர்.
அவர்கள் வாக்கு சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்பட்டு விட்டனர். பதற்றம் ஏற்படலாம் என்று கருதப்படும் ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணை நிலை ராணுவத்தினருடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து பல அடுத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் தைரியமாக வந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா நடக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கள்ள ஓட்டு போட நபர்களை தயார் செய்வதும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இவற்றை தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர தேர்தல் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு இந்த கண்காணிப்பு மேலும் தீவிரமாகும்.
சட்டம்–ஒழுங்கை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபான கடைகளை மூடவும், அதிரடி வாகன சோதனைகளுக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.
24–ந்தேதி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். இதற்காக 23–ந்தேதியே ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் இருக்கும் 24–ந் தேதி மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம்.
அதன்பிறகு எந்திரங்கள் சீல் வைத்து ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்து செல்லப்படும். 21 நாட்கள் கழித்து மே 16–ந்தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும். அன்று பகல் 11 மணிக்கெல்லாம் மத்தியில் அமையும் புதிய ஆட்சி பற்றிய விவரங்கள் தெரிந்துவிடும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக