புதன், 8 ஜனவரி, 2014

போலியோ சொட்டு மருந்து முகாம்: 19ம் தேதி நடக்கிறது

கடலூர் :கடலூர் மாவட்டத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 19ம் தேதி நடக்கிறது.தமிழகம் முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பொது சுகாதாரத் துறை சார்பில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி, நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கடலூர் மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

இப்பணியில், 5000க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட உள்ளனர். போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துவது தொடர்பாக, கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமையில், நாளை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், சுகாதாரம், இந்திய மருத்துவ சங்கம், கல்வி, வருவாய், மின்சாரம், போக்குவரத்து என, அனைத்துத் துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

கூட்டத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்காக எந்தெந்த இடங்களில் மையங்கள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், விழிப்புணர்வு மற்றும் மின்சார வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக ”காதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக