ஜித்தா: சவூதி புதிய தொழிலாளர் கொள்கை(நிதாகத்) கெடுக்காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஆசிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சவூதி அரேபியா நாட்டின் புதிய தொழிலாளர் கொள்கையான நிதாகத் சட்டத்தின்படி, அந்நாட்டில் சட்ட விரோதமாக தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது பணி நிலையை நவம்பர் 3-ஆம் தேதிக்குள் சரி செய்து கொள்ள வேண்டும் என்று சவூதி அரசு காலக் கெடு விதித்துள்ளது. மேலும் இந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் சரி செய்து கொள்ளாத வெளிநாட்டவர்கள் மீது அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் சவூதி அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள், தம் நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் தங்களது நிலையைச் சரி செய்துகொள்ள வேண்டி இருப்பதால், மேலும் கெடுக்காலத்தை நீட்டிக்க வேண்டும் சவூதி அதிகாரிகள் வட்டாரங்களை அணுகியுள்ளன.
இந்தோனேஷியா நாட்டினர் சுமார் 70,000 பேர் இதுவரை தங்களது நிலையைச் சரிசெய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
சுமார் 800,000 பாகிஸ்தானியர் தங்களது நிலையைச் சரிசெய்துள்ளதாகவும் இன்னும் சிலரே மீதமுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ஆயிரக்கணக்காண பாகிஸ்தானியர்களுக்குச் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால் அவர்களின் தொழிலாளர் நிலையைச் சரிசெய்துகொள மேலும் கால நீட்டிப்பு அவசியம் என்பதாக சவூதி வாழ் பாகிஸ்தானியர்கள் கோரியுள்ளனர்.
இதுவரை சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 800,000 வெளிநாட்டினர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சவூதி குடியுரிமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கெடுக்காலம் நீட்டிப்பு இல்லை என்றும், நவம்பர் 4-ஆம் தேதி முதல் சவூதி காவல்துறையினர் தங்களது பணியைத் தொடங்குவார்கள் என்றும், தங்களது நிலையைச் சரி செய்துகொள்ளாத வெளிநாட்டினர், கைது செய்யப்படுவதோடு அவர்களுக்கு 2 வருடம் சிறைத்தண்டனையும் 1லட்ச ரியால் அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக