கும்பகோணம் : பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கும்பகோணம் அருகே அணைக்கரை அருகிலுள்ள ஒழுகச்சேரி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் திடீரென எதிர்பாராத விதமாக தீ பற்றிக் கொண்டதில் பட்டாசுகள் வெடித்து சிதறியது.
இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருதுவமனையில் சிகிழ்ச்சை பலனின்றி இறந்தார் தொழிற்சாலையில் பணியிலிருந்த 12-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
தீவிபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடி விபத்து தொடர்பாக, காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக