முஸஃபர் நகர்: உத்திரபிரதேசம் மாநிலம் முஸஃபர் நகரில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
மாநிலம் முஸஃபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கலவரத்ரை தூண்டியதாக பாஜவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு முஸஃபர்நகர் மாவட்டத்தின் புதானா பகுதியில், மீண்டும் நிகழ்ந்த மோதலில் அப்ரோஸ் (20), மெஹர்பன் (21), அஜ்மல் (22) உட்பட 4 பேர் உயிரிழந்ததாக முகமதுபுராய்சிங் கிராம மாவட்ட ஆட்சியர் கௌசால் ராஜ் தெரிவிதுள்ளார்.
மேலும், ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என்றும், சொந்த ஊர் திரும்பிய போது அவர்களை வன்முறையாளர்கள் கொலை செய்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக