புதன், 30 அக்டோபர், 2013

சவூதி: அன்னிய செலாவணி அளிப்பில் இரண்டாம் இடம்!


ரியாத்: உலகில் அன்னிய செலாவணி ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் சவூதி அரேபியா இரண்டாம் இடத்தில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆண்டொன்றுக்கு சுமார் 27.6 பில்லியன் டாலர்கள் அன்னிய செலாவணியாக சவூதியை விட்டும் வெளியேறுகின்றன என்று சொல்லப்படுகிறது.
சவூதியில் வெளிநாட்டவர் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பெரிதாகத் திறந்து விடப்படாதிருப்பதாலும், வெளிநாட்டுப் பணியாளர்  தம் குடும்பத்தை அழைத்துக் கொள்வதில் காணப்படும் கெடுபிடிகளாலும், மண்ணின் மைந்தர்கள் பணி வாய்ப்புகளில் காண்பித்து வரும் தயக்கமும் இதற்குப் பிரதானக் காரணங்கள் என்று சவூதி எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், தேவைக்கதிமாக அயலகப் பணியாளர்களை, குறிப்பாக வீட்டு வேலைகளுக்கு, சவூதியர் சார்ந்திருப்பதும் குறைக்கப்பட வேண்டும் என்றும் எழுத்தாளர்களில் சிலர் கருத்தளித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக