திங்கள், 7 அக்டோபர், 2013

பரங்கிப்பேட்டை உட்பட மாவட்டத்தில் 22 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம்

 கடலூர்/ பரங்கிப்பேட்டை :கடலூர் மாவட்டத்தில், 22 எஸ்ஐக்களை அதிரடியாக பணியிட செய்து, எஸ்பி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

 அதன் விவரம்: ரெட்டிச்சாவடி எஸ்ஐ பி.ஆறுமுகம் நடுவீரப்பட்டுக்கும், அங்கு பணிபுரிந்து வந்த ராஜமாணிக்கம் காடாம்புலியூருக்கும், காடாம்புலியூர் எஸ்ஐ எஸ்.சுப்பிரமணியம் கடலூர் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், வேப்பூர் எஸ்ஐ சிங்காரவேலு புவனகிரி குற்றப்பிரிவுக்கும், கடலூர் முதுநகர் எஸ்ஐ எஸ்.சம்பத் கடலூர் தீண்டாமை தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 இதேபோல மங்களம்பேட்டை எஸ்ஐ ராஜராஜசோழன் பண்ருட்டி குற்றப்பிரிவுக்கும், அங்கு பணிபுரிந்து வந்த கே.சித்ரா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், விருத்தாசலம் எஸ்ஐ ஆர்.விஜயகுமார் சேத்தியாத்தோப்பு குற்றப்பிரிவுக்கும், சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்ஐ பாண்டிசெல்வி பரங்கிப்பேட்டைக்கும், கடலூர் சமூகநீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு எஸ்ஐ டி.கே.ஸ்ரீநிவாசன் கடலூர் முதுநகர் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 பரங்கிப்பேட்டை எஸ்ஐ டி.செல்வம் சிதம்பரம் தனிப்பிரிவுக்கும், புதுப்பேட்டை எஸ்ஐ ஏ.சக்கரபாணி பண்ருட்டிக்கும், கருவேப்பிலங்குறிச்சி எஸ்ஐ எஸ்.அகிலன் புவனகிரிக்கும், ஸ்ரீமுஷ்ணம் எஸ்ஐ பி.பாரதி சோழதரத்துக்கும், குள்ளஞ்சாவடி எஸ்ஐ வி.சிவானந்தம் வடலூருக்கும், வேப்பூர் எஸ்ஐ பி.கோபி விருத்தாசலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 சேத்தியாத்தோப்பு எஸ்ஐ டி.நரசிம்மஜோதி கருவேப்பிலங்குறிச்சிக்கும், ராமநத்தம் எஸ்ஐ ஏ.வெங்கடேசன் வேப்பூருக்கும், வடலூர் எஸ்ஐ எம்.வீனஸ் நெய்வேலி டவுன்ஷிப்புக்கும், குமராட்சி எஸ்ஐ கே.கணபதி சேத்தியாத்தோப்புக்கும், விருத்தாசலம் எஸ்ஐ கணேசன் கம்மாபுரத்துக்கும், காட்டுமன்னார்கோவில் எஸ்ஐ ஆசைத்தம்பி ஸ்ரீமுஷ்ணத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக