காபூல் :ஆப்கான் நாடாளுமன்றத்தில் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி அதிபர் ஹமித் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் செயல்படாத வேளைகளில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்த புதிய அறிவிப்பை ஹமித் கர்சாய் நேற்று வெளியிட்டுள்ளார் . அதன்படி 250 நாடாளுமன்ற தொகுதிகளில் இரு தொகுதிகளில் ஒரு இந்துவும், ஒரு சீக்கியரும் ஆப்கன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படுவர்.
ஆப்கானில் 80000 த்திற்கும் அதிகமான ஹிந்துக்களும், சீக்கியர்களும் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக