நியூயார்க் :மாறிவரும் உலகப் பருவநிலை தொடர்பான சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், புவி வெப்பமடைந்து வருவதற்கான முக்கியக் காரணம் மனிதச் செயற்பாடுகள்தான் என்பது விஞ்ஞானிகளுக்கு 95% உறுதியாகத் தெரிவதாக கூறப்பட்டுள்ளது.தற்போது புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயற்பாடுகள் காரணம் என்பது உறுதியாகத் தெரிவதாக ஐநா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த நூற்றாண்டின் கடைசியில் உலகக் கடல் மட்டம் தற்போது உள்ள அளவிலிருந்து 82 செண்டிமீட்டர்கள் உயரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டரீதியான உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கங்கள் முயன்றுவரும் நிலையில், விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை மிகவும் அவசியமானது என ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் இந்த நிபுணர் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உலகப் பருவநிலை தொடர்பான ஐநா உச்சிமாநாடு ஒன்றை அடுத்த வருடத்தில் கூட்டப்போவதாக அவர் கூறியுள்ளார்.
புவியின் சராசரி வெப்பநிலை இரண்டு செல்ஷியஸுக்கும் கூடுதலாக அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து நாடுகள் பொறுப்பேற்று சம்மதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக