
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற
அடையாளம் தெரியாத மூதாட்டி ரயிலில் அடிப்பட்டு இறந்தார்.பரங்கிப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில்
நேற்று முன்தினம் இரவு மூதாட்டி ஒருவர் ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது,
மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் மோதியது.
அதில், படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே
இறந்தார்.அவர் கருநீலக்கலர் புடவை,
நீலக்கலர் ஜாக்கெட் அணிந்துள்ளார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற அடையாளம் விபரம்
தெரியவில்லை.சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து
வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக