ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

பெட்ரோல், டீஸல் விலை மீண்டும் உயர்வு நள்ளிரவு முதல் அமல் !

புதுடெல்லி: நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீஸல் விலை உயர்வு .பன்னாட்டு சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் டீசல் விற்பனையில்  மாதந்தோறும் 50 காசுகள் வரையும் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத வகையில் 68.85க்கு வீழ்ச்சியடைந்ததாலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனை ஈடுகட்ட எரிபொருள் விலையை உயர்த்த வேண்டியது அவசியம் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கூறி வந்தன. இதுதொடர்பாக பிரதமர் மற்றும் நிதி மந்திரிக்கு பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி கடிதம் எழுதினார்.இதனையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 35 காசுகளும் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகளாக விலை அதிகரித்திருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.77.50க்கும், டீசல் ரூ.57க்கும் விற்பனை செய்யப்படும். மேலும் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தபடும் என தெரிகிறது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை 6-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 17-ம் தேதிக்குப் பிறகு டீசல் விலை 8 முறை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக