
நிகழ்ச்சியை சகோ. H. ஜெய்னுல்லாபுதீன் (கொல்லங்கடைத் தெரு) தொகுத்து வழங்க இந்நிகழ்ச்சியில் கலிமா K. ஷேக் அப்துல் காதர் மரைகாயர்.
பேரூராட்சி தலைவர் முனைவர் . M. S. முஹம்மது யூனுஸ். பரங்கிபேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன். M. ஹமீத் அப்துல் காதர்.
மற்றும் தி.மு.க, அ.தி.மு.க, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
வெளிநாடு வாழ் பரங்கிப்பேடை அமைப்புகளான சவுதி அரேபியா கிழக்கு மாகானம், ஜுத்தா, ரியாத், அமீரகம், குவைத் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சமூக சேவகர் திரு. வாசு சிதம்பரம் அவர்களுக்கு பொண்ணாடை போற்றியும், மலர் கொத்து வழங்கியும் கவுரவித்தார்கள்.
அமெரிக்கவிலிருந்து வந்திருந்த சகோ. கவுஸ்மியான் அவர்களும் பொண்ணாடை போற்றி சமூக சேவகர் திரு. வாசு சிதம்பரம் அவர்களை கவுரவித்தார்.
கிழக்கு மாகாண சங்க தலைவர் சகோ. கஃபார் அலிகான் அவர்கள் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்கம், கிழக்கு மாகாணம், சவுதி அரேபியா இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக