புதன், 28 ஆகஸ்ட், 2013

பெண்களுக்குப் பாதுகாப்பு சவூதியில் புதிய சட்டம்

சவூதியில் பெண்களுக்கு அவர் தம் பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய சட்டத்தை சவூதி அரசு கொண்டு வந்துள்ளது. 
அதன்படி சக பெண் பணியாளருக்குத் தொந்தரவு அளிப்பவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனையும், அத்துடன்  சவூதி ரியால்கள் 5,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் குற்றமிழைப்பவர்களுக்கு
இத்தண்டனை இரட்டிப்பாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி ஷூரா கவுன்ஸில் எனப்படும் அரசவை இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத்தை சவூதியில் பெண்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக