
சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
அவர் பேசியது:
தமிழகத்தைப் பொறுத்தவரை, பொதுத்தேர்வுகளின் கல்வித் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கின்றன.
அம்மாவட்டங்களுக்கு அரசு அளிக்கும் அதே சலுகைகளைத்தான் கடலூர் மாவட்டத்துக்கும் வழங்குகிறது. ஆனால், கடலூர் மாவட்டம் கல்வித் தேர்ச்சியில் 31-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் வேதனைக்குரியது.
எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சமூகஆர்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து, மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதன் பின்னர், நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வல்லத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக