
கடலூர் :கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் 14 இடங்களில் இயற்கை பேரிடர் பாதுகாப்புத் தடுப்பு
மையங்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடலூர் மாவட்டம் புவியியல் ரீதியாக
அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. மேலும், கடற்கரை
மாவட்டமாக
அமைந்துள்ளதால் "சுனாமி' மற்றும் "தானே' போன்ற இயற்கை சீற்றங்களின் போது
கடலூர் மாவட்டம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளானது.இயற்கைச் சீற்றங்களின் போது
பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய மற்றும்
மாநில அரசுகளின் நிதியுதவியுடன் அவசரகால சுனாமி மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ்
மாவட்டத்தில், கடலூர் வட்டத்தில் சொத்திக்குப்பம், குடிகாடு, நாயக்கன்பேட்டை,
தியாகவல்லி.சிதம்பரம் வட்டத்தில் பரங்கிப்பேட்டை, புஞ்சைமகத்து வாழ்க்கை,
எம்.ஜி.ஆர்.திட்டு, பின்னத்தூர், தில்லைவிடங்கன், கூழையாறு, திருநாரையூர்,
ஜெயங்கொண்டபட்டினம், வீரன்கோவில் திட்டு, அம்பிகாபுரம் ஆகிய 14 இடங்களில் பேரிடர்
பாதுகாப்பு தடுப்பு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.இதில், கடலூர் துறைமுகம் அடுத்த
சொத்திக்குப்பம், குடிகாடு கிராமங்களில் பேரிடர் பாதுகாப்புத் தடுப்பு மைய
கட்டுமானப் தற்போது முழுவீச்சில் பணிகள் நடந்து வருகின்றன. சொத்திக்குப்பம்
கிராமத்தில் 1.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,441 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு
அடுக்குகளுடன் கூடிய பேரிடர் பாதுகாப்பு மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.இந்த
பேரிடர் பாதுகாப்பு மையம் இயற்கை சீற்றங்களின் போது 1,000 பேர் தங்கும் இடமாகவும்,
பிற நேரங்களில் பள்ளிகளாகவும் செயல்படும். வகையில் கட்டப்படுகிறது. மேலும், இயற்கை
சீற்றங்களின் போது கால்நடைகளைப் பாதுகாக்கும் இடங்களும் இம்மையத்தில்
கட்டப்படுகின்றன.இதேப்போன்று, குடிகாடு கிராமத்தில் 2.03 கோடி ரூபாய்
மதிப்பீட்டில், 1,294 சதுர மீட்டர் பரப்பளவில் மையம் கட்டும் பணி நடக்கிறது.
இதேபோன்று மாவட்டத்தில் மற்ற இடங்களில் கட்டப்படும் மையங்களில் இயற்கைச்
சீற்றங்களின் போது பொதுமக்கள் தங்குமிடமாகவும், மற்ற நேரங்களில் சமுதாயக்
கூடங்களாகவும் செயல்படும்.கட்டுமானப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைந்து
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக