சனி, 27 ஜூலை, 2013

காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு! மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

தஞ்சாவூர்:மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் துவங்கியுள்ளது.

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தால் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக கூறி இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடியில் உள்ள மீத்தேன் வாயுவை எடுக்க தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. மீத்தேன் வாயு எடுப்பதால் நிலத்தடி நீர் முழுவதும் எடுக்கப்பட்டு காவிரி பாசன விளைநிலங்கள் பாலைவனமாக மாறும் நிலை உருவாகும் என்று கூறி டெல்டா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் தமிழக அரசு மீத்தேன் வாயு எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, நிபுணர்குழு ஒன்றை அமைத்து மீத்தேன் வாயு எடுப்பதால் ஏற்படும் பாதிப்பை ஆராயவும் ஆணை பிறப்பித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக