கடலூர்: நெய்வேலி என்.எல்.சி.யின் 5 சத பங்குளை விற்கும் மத்தியஅரசின்
முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 12-வது நாளாக போராட்டம் நடந்து
வருகிறது.இந்நிலையி்ல் என்.எல்.சி. போராட்டத்திற்கு ஆதவராக இடது சாரி கட்சியினர்
கடலூர் மாவட்டத்தில் 18-ம் தேதி பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கிடையே
என்.எல்.சி. தொழிற்சங்கங்களின் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் இன்று மூன்றாவது
நாளாக நடக்கிறது. உண்ணாவிரதத்தில் 177 பேர் பங்கேற்றுள்ளனர் இந்நிலையில் 22 பேர் மயங்கி விழுந்தனர் அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி என்.எல்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் இவர்களுடன் சேர்த்து இதுவரை 26 பேர் மயங்கி விழுந்துள்ளனர். 30–க்கும் மேற்பட்டோர் மிகவும் சோர்வுடன் இருக்கிறார்கள். 3 நாட்களாக தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பதால் பலர் உட்கார முடியாமல் படுத்த நிலையில் இருக்கிறார்கள்
நெய்வேலி தொ.மு.ச. அலுவலகத்தில் தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. எச்எம்எஸ் சங்க தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். தொமுச, எச்எம்எஸ், சிஜ டியூ, தேசிய முற்போக்கு திராவிடர் தொழிற்சங்கம், ஏஜடியூசி பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் ஏஜடியூசி சங்க மாவட்ட செயலாளர் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-வருகிற 18-ந் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் இணைந்து வணிகர் சங்கங்களோடு சேர்ந்து ஒருநாள் பந்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று பந்த போராட்டத்திற்கான கருத்தரங்கம் நெய்வேலியில் தொமுச அலுவலகத்தில் நடைபெறும். 16-ந் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரம் நடைபெறும். 17-ந் தேதி வியாபாரிகளுக்கு பந்த் தொடர்பாக துண்டு பிரசுரம் வழங்கப்படும். 18-ந் தேதி பந்த் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக