அபுதாபி:அபுதாபி மற்றும் துபை மாகாண சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் சுமார் 1500 நபர்கள் இந்த ரமலான் மாதத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள் என்ற தகவலை அமீரகத்தின் முன்னணி செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யான் அபுதாபி மாகாண சிறைகளில் இருக்கும் ஹிந்து கைதிகள் உட்பட 973 கைதிகளை அவர்களது வழக்கு தொடர்பாக நீதி மன்ற உத்தரவின் மூலம் செலுத்த வேண்டிய பிணைத் தொகையை தாமே செலுத்தி அவர்களை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் துபை சிறைகளில் இருக்கும் நூற்றுக் கணக்காண கைதிகளை விடுதலை செய்ய அமீரக துணை அதிபரும் துபை ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் துபையிலிருக்கும் தன்டணை மற்றும் சீர்திருத்த மையங்களில் இருக்கும் ஹிந்து கைதிகள் உட்பட 625 கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நீதி மற்றும் காவல் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இக்கைதிகளை விடுவிப்பதற்கான சட்ட ரீதியான பணிகளை தொடங்கி விட்டதாக துபை அரசின் தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக