சிதம்பரம்:சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துறை அமைச்சருக்கு சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்."சிதம்பரம்-கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் உள்ள சி.முட்லூரில் அரசு கலலைக்கல்லூரி அமைத்துள்ளது. சுமார் 3500 மாணவ, மாணவியர்கள் இரு ஷிப்டுகளாக பயில்கின்றனர். இச்சாலையில் போக்குவரத்து வசதியில்லா காரணத்தால் சுமார் 3 கி.மீ தூரம் மாணவ, மாணவியர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிதம்பரம்- கடலூர், பரங்கிப்பேட்டை வழித்தடங்களில் சி.முட்லூர் வழியாக சில பஸ்களை புதிய பாலத்தின் வழியாக கல்லூரி நேரங்களில் இயக்க வேண்டும்.
கொள்ளிடக்கரையை பலப்படுத்துவது என்ற பெயரால் கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கையால் தற்போது இச்சாலை குறுகலாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது. இதனால் சுமார் 10 கிராமங்களுக்கு மேல் போக்குவரத்து வசதியில்லாமல் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கு 4 கி.மீ தூரம் நடத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சிதம்பரத்திலிருந்து சிவபுரி வழியாக பெராம்பட்டு, சிதம்பரத்திலிருந்து சிவபுரி, வரகூர்பேட்டை வழியாக ஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக