பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையின் பழமைவாய்ந்த பாரம்பரிய பள்ளிவாசல்களில் ஒன்றான வாத்தியாப்பள்ளியில் புதிய கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று புதிய ஜூம்ஆ பள்ளியாக நேற்று மாலை திறக்கப்பட்டது. திருச்சி அய்மான் கல்லூரி முதல்வர் ஜெ. சம்சுதீன் திறந்து வைத்த இந்த பள்ளிவாசல் திறப்பு விழா நிகழச்சிக்கு வாத்தியாப்பள்ளி நிர்ஹெச். அப்துஸ் ஸமது கிராஅத்துடன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இவ்விழாவில் மீராப்பள்ளி நிர்வாகி கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயல் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ், தலைவர் ஹமீது அப்துல் காதர், பி. நூர் முஹம்மது, ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்வாகி எம். அப்துல் காதிர் மரைக்காயர் தலைமை வகித்தார்.எம்.. ஹெச். கபீர் அஹமது மரைக்காயர், அப்துல் காதர் மதனி, மீராப்பள்ளி இமாம் அஹ்மது கபீர், புதுப்பள்ளி இமாம் காஜா முயினுத்தீன், நவாபு பள்ளி இமாம் கவுஸ் முஹயத்தீன், வாத்தியாப் பள்ளி இமாம் ஹபீபுல்லப ஆலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வாத்தியாப்பள்ளி நிர்வாகி முஹம்மது முஹையத்தீன் நன்றியுரை வழங்கினார்.திறப்பு விழாவை முன்னிட்டு முன்னதாக (01/06/2013) மாலை பெண்களுக்கான சிறப்பு பயான் நடைப்பெற்றதுஇதில், தமிழன் தெலைக்காட்சி மார்க்க சொற்பொழிவாளர் ஏ. மெஹ்ராஜ் ஃபாத்திமா இறையருள் பெறுவது எப்படி என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த சிறப்பு பயானில் முஸ்லிம் பெண்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
நன்றி :MYPNO.COM















0 கருத்துகள்:
கருத்துரையிடுக