திங்கள், 10 ஜூன், 2013

அனைத்து பொறுப்புகளிலிருந்தும் எல்.கே அத்வானி ராஜினாமா - பாஜகவில் பிளவு?

புதுடெல்லி:பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த ராஜினாமா கடித்தில் கூறியிருப்பதாவது:-

தற்போது கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காக மட்டும்தான் செயல்படுகிறார்கள். இவ்வகையில் தனிநபர் ஆதாயத்துக்காக செயல்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக உள்ளது.

பா.ஜ.க.வை ஆரம்பித்த தலைவர்கள் எதிர்பார்த்த பாதையில் கட்சி இப்போது செல்லவில்லை. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்களால் எந்த நோக்கத்துடன் பா.ஜ.க. தொடங்கப்பட்டதோ அந்த சித்தாந்தத்தின்படிதான் தற்போது கட்சி செல்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனவே, பா.ஜ.க.வில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர், பாராளுமன்றக் குழு மற்றும் தேர்தல் குழு ஆகியவற்றில் அத்வானி பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக