செவ்வாய், 4 ஜூன், 2013

கடலூர் மாவட்டத்தில் 354 போலீஸார் இடமாற்றம்

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐகள், தலைமைக் காவலர்கள் உள்பட 354 பேரை இடமாற்றம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்கள் உள்ளன. இதில் 6 அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்பட 52 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவரும் எஸ்எஸ்ஐகள், தலைமைக் காவலர்கள், முதல்நிலை காவலர்களை பொதுஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மாவட்டம் முழுவதும் 149 எஸ்எஸ்ஐகள், 205 தலைமைக் காவலர்கள், முதல்நிலை காவலர்களை அவர்கள் பணியில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் இருந்து வேறு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த 20 பேரும், கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் 18 பேரும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் 20 பேரும், தேவனாம்பட்டிணம் போலீஸ் நிலையத்தில் 10 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் மற்ற போலீஸ் நிலையங்களில் பணியாற்றிவந்த எஸ்எஸ்ஐகள், தலைமைக் காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உள்பட மொத்தம் 354 பேரை இடமாற்றம் செய்து எஸ்பி ஆ.ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக