புதன், 17 ஏப்ரல், 2013

பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதிகளில் மீன்பிடி படகுகள் பழுதுபார்த்தல் பணி

பரங்கிப்பேட்டை:மீன்பிடி தடைக்காலம் துவங்கியதால், பரங்கிப்பேட்டை  மற்றும் கிள்ளை பகுதி மீனவர்கள், படகுகளை பழுதுபார்த்தல் மற்றும் வலைகளை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் மீன் இனப்பெருக்கத்தையொட்டி, ஏப்ரல் 15ம் தேதி முதல் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் தடைக்காலம் அமலுக்கு வந்தது.
அதையொட்டி பரங்கிப்பேட்டை அருகே கிள்ளை கடற்கரையோர கிராமங்களான முடசல் ஓடை, பொன்னந்திட்டு, கிள்ளை, கூழையார், எடப்பாடி உட்பட 20க்கும் மேற்பட்ட பகுதி மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், பைபர் படகுகளை முடசல் ஓடை மீன் இறங்குதளத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், சாமியார்பேட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், படகுகளை அன்னங்கோவில் வெள்ளாற்று கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.மேலும், தற்போது படகுகளை பழுதுபார்த்தல் மற்றும் வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக