சனி, 25 ஆகஸ்ட், 2012

பரங்கிப்பேட்டை அருகே சவுக்கு மரங்கள் சேதம்: விஷமிகளுக்கு வலை

Industrial Agroforestryபரங்கிப்பேட்டை:கரிக்குப்பத்தில் சவுக்கு மரங்களை சேதப்படுத்திய விஷமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. விவசாயி. இவருக்கு அதே பகுதியில் மூன்று ஏக்கரில் சவுக்குதோப்பு உள்ளது. நேற்று முன்தினம் விஷமிகள் சிலர் நன்கு வளர்ந்த மரங்கள் மீது தீ வைத்தனர். இதனால் மரங்கள் எரிந்து சாம்பலானது. சேதமடைந்த மரங்களின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக