பிளாஸ்டிக்கை தவிர்த்தால் பிறவி ஊனத்தைத் தடுக்க முடியும்'' என
கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசினார்.விருத்தாசலம் அடுத்த ஆலடி ஜெஸிக்கா சிறப்புப்
பள்ளி மாணவர்களுக்கு உடல் இயக்க உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கடலூர் செயின்ட்
ஜோசப் கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல
அலுவலர் மனோகர், மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, பெங்களூரு மோட்டிவேஷன் தொண்டு
நிறுவன வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், முதன்மை பயிற்சியாளர் செல்வம் முன்னிலை
வகித்தனர். ஜெஸிகா பள்ளி தாளா ளர் ஜூலியானா வரவேற்றார்.
பெங்களூரு மோட்டிவேஷன் நிறுவனம் சார்பில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 42 மாணவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், வீல் சேர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசியதாவது:கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளிகள் இயங்குகின்றன.
ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டட வசதியும், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பிசியோ தெரபிஸ்ட் பணியாளர்களுக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. தங்கிப் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதம் 500 ரூபாய் அரசு வழங்குகிறது. இப்பள்ளிக்கு அரசு வழங்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க பரிந்துரைக்கப்படும்.
மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐந்து நிமிடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப், பேப்பர்கள் மற்றும் பைகள் மண்ணில் 500 ஆண்டுகள் வரை மட்காமல் மண்ணின் வளத்தை கெடுக்கும்.பிளாஸ்டிக்கை எரிப்பதால் அதிக நச்சுத் தன்மையுடைய டையாக்ஸின் வாயு காற்றை மாசடையச் செய்கிறது. அதனை சுவாசித்தால் பிறவி ஊனம், புற்றுநோய் ஏற்படும். ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பர்களில் பார்சல் கட்டும்போது பிளாஸ்டிக் இளகி, உணவுடன் கலந்து உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்குகிறது.மருத்துவம் மூலம் ஊனத்திற்கு சிகிச்சையளிக்கதான் முடியும். பிளாஸ்டிக்கை தவிர்ப்பது மூலமே பிறவி ஊனத்தை தடுக்க முடியும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக