செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

மயிலாடுதுறை - சென்னைக்கு இன்டர்சிட்டிஎக்ஸ்பிரஸ் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சிதம்பரம்:மயிலாடுத்துறை - சென்னை இடையே இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் சரவணகுமார், மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராஜ், மத்திய அமைச்சர் வாசன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:கடந்த 2008-09 ரயில்வே பட்ஜெட்டில் சிதம்பரத்தில் இருந்து குமராட்சி, காட்டுமன்னார்கோவில், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், குன்னம், அரியலூர் வழியாக ஆத்தூர் வரை புதிய ரயில் பாதை அமைக்க அறிவிக்கப்பட்டு, ரயில்வே போர்டு ஆய்வு அறிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும்.மயிலாடுத்துறை - சென்னை இடையே புதியதாக இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அறிவிக்க வேண்டும். சிதம்பரம் ரயில் நிலையத்தில் மேலும் ஒரு கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக