
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தோப்பு வலசையைச் சேர்ந்தவர் முருகேசன். அவர் துபாயில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று அவரும், சில மீனவர்களும் 2 பிளாஸ்டிக் படகுகளி்ல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் துபாய் ஜமேல்அலி துறைமுகப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் திடீர் என்று பலத்த சூறாவளிக் காற்று வீசியது.
அப்போது அவர்களின் படுகுகள் நிலைதடுமாறின. திடீர் என்று இரணடு படகுகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. படகுகள் மோதிய வேகத்தில் முருகேசன் எதிர்பாராவிதமாக கடலில் விழுந்து பலியானார். முருகேசன் குடும்பத்தாருக்கு இந்த தகவல் இன்று காலை கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த மாதம் 16ம் தேதி துபாய் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அமெரிக்க கடற்படை சுட்டதில் பலியான மீனவர் சேகர் தோப்புவலசையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக