கடலூர் : அலுவலக வேலை நாள்களில் ரேஷன் கடை திறக்கப்படவில்லை என்றால் விற்பனையாளர் மற்றும் வங்கிச் செயலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ராஜேந்திரரத்னூ தெரிவித்துள்ளார்.÷அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் சில ரேஷன் கடைகள் வேலை நாள்களில் திறக்கப்படாமல் இருப்பதாக தணிக்கையின்போது தெரிய வந்துள்ளது. மேலும் சில கடைகள் அலுவலக வேலை நேரத்தில் முழு நேரமும் திறந்து வைத்து இயக்காமல் பகுதி நேரம் மூடியே இருப்பதாக பொது மக்களிடம் இருந்து புகார் வந்துள்ளது.
÷இனி அலுவலக வேலை நாள்களில் அதிகாரிகள் திடீர் தணிக்கையின்போது கடை மூடி இருந்தாலும், பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தாலும் சம்மந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர் மீதும், அதைக் கண்காணிக்க தவறிய வங்கிச் செயலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக