ஞாயிறு, 15 ஜூலை, 2012

புற்றுநோய் மருந்திற்கு விலையை அதிகரிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா நிர்பந்தம்!


US pushing India to hike cancer drug priceவாஷிங்டன்:அமெரிக்காவில் மருத்துவ சிகிட்சைக்கான செலவுகளை குறைக்க திட்டங்களை தீட்டிவரும் அதிபர் பாரக் ஒபாமா, இந்தியாவில் மருந்து விலையை அதிகரிக்க நிர்பந்தம் அளித்து வருகிறார்.
ஹஃபிங்டன் போஸ்ட் நடத்திய ஆய்வில் ஒபாமாவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது. இரண்டு வாரம் முன்பு அமெரிக்க காப்புரிமை மற்றும் வணிக குறியீடு அலுவலக துணை இயக்குநர் தெரஸா ரியா வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
தங்களுடைய அரசியல் சக்தியை பிரயோகித்து இந்தியா போன்ற நாடுகள் மீது நிர்பந்த அளித்து வருவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பெயர் கெமிக்கல் அண்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் காப்புரிமையுள்ள நெக்ஸவர் என்ற மருந்திற்கு பதிலாக விலை குறைந்த மருந்தை தயாரிக்க இந்தியா நடத்திய முயற்சிகளை ரியா கிண்டலடித்தார்.
இந்தியாவின் முயற்சி உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது என ரியா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என ஆய்வறிக்கை கூறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக