செவ்வாய், 31 ஜூலை, 2012

பரங்கிப்பேட்டை வி.ஏ.ஓ., அலுவலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் காத்துக் கிடக்கும் அவலம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை  கிராம நிர்வாக அலுவலகம் மூன்று நாட்களாக திறக்கப்படாததால் பொதுமக்கள் காத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை  அகரம் மெயின் ரோட்டில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு அகரம், பெரியமதகு மற்றும் அகரம் ரயிலடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள்
மற்றும் பள்ளி மாணவர்கள் ஜாதிச்சான்று, பிறப்பு, இறப்பு சான்று, இருப்பிட சான்று, வாரிசு சான்று, அடங்கல் உள்ளிட்ட தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக கிராம நிர்வாக அலுவலர் வராததால் அலுவலகம் பூட்டிக் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் தினமும் காலை முதல் மாலை வரை காத்திருந்து விட்டு வீட்டிற்குச் சென்று விடுகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் எங்கு சென்றுள்ளார் என்ற தகவலும் தெரிந்து கொள்ளக் கூட கிராம உதவியாளர்கள் அலுவலகத்தை திறந்து வைக்காமல் உள்ளனர். அலுவலகம் தினமும் திறந்திருக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக