வெள்ளி, 27 ஜூலை, 2012

சென்னையில் சிறுமி பலி எதிரொலி கல்வி நிறுவன வாகனங்கள் சோதனை

சிதம்பரம்:சிதம்பரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் 20 பள்ளி, கல்லூரி வாகனங்கள் சிக்கின.சென்னை அருகே நேற்று முன்தினம் பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக சிறுமி விழுந்துசக்கரத்தில் சிக்கி இறந்தார். இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்களை திடீர் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்
பேரில் நேற்று காலை சிதம்பரத்தில், கும்பகோணம் அரசு பஸ் டெப்போ பைபாஸ் சாலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரி முனுசாமி ஆகியோர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.போலீஸ் தரப்பில், வாகனங்களில் அதிக அளவு பள்ளி பிள்ளைகளை ஏற்றிச் சென்றது, வாகன உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பஸ் ஓட்டியது என தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் உள்ளிட்ட 13 கல்வி நிறுவன வாகனங்கள் மீது வழக்குப் பதிந்து அபராதமாக 35 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
வட்டார போக்குவரத் துறை அதிகாரியால், பதிவு செய்யாமல் இயக்கப்பட்ட ஒரு தனியார் பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து பிற பள்ளி வாகனங்கள் மீது 5 வழக்குகள் பதிந்து 500 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.பள்ளி, கல்லூரி வாகனங்கள் சரியான விதிமுறையில் இயக்க வேண்டும். இல்லையெனில் வாகனங்கள் பறிமுதல் செய்து உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சோதனை தொடரும் என வட்டார போக்குவரத்து அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக