பரங்கிப்பேட்டை:உயர் மின்அழுத்தப் பாதையில் மின்கம்பியை திருட முயற்சி செய்த நபர் மின்சாரம் பாய்ந்துஇறந்தார்பரங்கிப்பேட்டைகுமரன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற ராஜாராமன் (45). இவர், செவ்வாய்க்கிழமை பின்னத்தூர் துணை மின்நிலையத்திலிருந்து பரங்கிப்பேட்டை செல்லும் உயர் அழுத்த மின்பாதையில் உள்ள மின்கம்பியை பிளேடால் அறுத்து திருட முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது மின்சாரம் பாய்ந்து ராஜாராம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மின்வாரிய உதவி செயற் பொறியாளர் மோகன்காந்தி கொடுத்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக