கடலூர்:கடலூர் மாவட்டம் குறிஞ்சிபடி யை அடுத்த தம்பிப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் வீரப்பன்,
குணசேகரன், சுதாகர், செஞ்சிவேல், அருள்ஜோதி, சிவச்சந்திரன்,
தைலாம்குணாம்பட்டினத்தைச் சேர்ந்த சேட்டு ஆகியோர் கடந்த 5ம் தேதி பெரிய
எலந்தம்பட்டைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் நிலத்தில் சவுக்கு மரங்கள் வெட்டுவதற்காக வந்தனர்.
இரவு சின்னசேமக்கோட்டை ஐயனார் கோவிலில் தங்கிவிட்டு நேற்று முன்தினம் 6ம் தேதி அதிகாலை 5 மணியளவில் 7 பேரும் டீ குடித்து விட்டு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கடலூரில் இருந்து கேரளாவுக்கு மீன் லோடு ஏற்றி வந்த அடையாளம் தெரியாத மினி லாரி பயங்கர வேகத்தில் அவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்தில் அருள்ஜோதி, 21, சிவச்சந்திரன், 28 ஆகியோர் இறந்தனர்.
கடலூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சேட்டு, 54, இறந்தார். படுகாயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணசேகரன், 42, செஞ்சிவேல், 40, ஆகியோர் நேற்று இறந்தனர். இவ் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக