ஞாயிறு, 17 ஜூன், 2012

அரிய வெள்ளை நாகம் கடலூரில் சிக்கியது

கடலூர் : கடலூரில் அரியவகையை சேர்ந்த மூன்றரை அடி நீளமுள்ள வெள்ளை நாகம் சிக்கியது. கடலூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரின் வீட்டு மாடிப் படியின் கீழே பலகைகள் அடுக்கி வைத்திருந்தார். பலகைகள் இடையே நேற்று அபூர்வ வகை வெள்ளை நாகம் படமெடுத்து ஆடியது. இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் பிராணிகள் நல ஆர்வலர் பூனம் சந்துக்கு தகவல் கொடுத்தார்.

அவர் விரைந்து வந்து மூன்றரை அடி நீளமுள்ள அரிய வகை வெள்ளை நாகத்தை லாவகமாக பிடித்தார். பின்னர் அதை அரசு காப்பு காட்டில் விடுவதற்காக கொண்டு சென்றார். அப்போது பூனம் சந்த் கூறுகையில் ‘இந்த நாகம் அரிய வகையை சேர்ந்தது. இதன் உடலில் கருப்பு செல்கள் குறைபாட்டால் வெள்ளையாக காணப்படுகிறது. இந்த வெள்ளை நாகத்தால் அதிக சூட்டையோ, சூரிய ஒளியையோ தாங்க முடியாது. இருட்டிலும், குளிரான இடங்களிலும் மட்டுமே பதுங்கி இருக்கும். இதற்கு விஷம் அதிகம். ஆளை உடனடியாக கொல்லக் கூடியது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக