திங்கள், 7 மே, 2012

குஜராத் கலவர வழக்கு: மோடியை மேலும் விசாரிக்க கோரிக்கை

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு ரெயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கலவரம் நடந்தது. மாலவ் பகோல் பகுதியில் உள்ள ஒடே கிராமத்தில் 2 பெண்கள் உள்பட 23 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இது தொடர்பாக 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். 32 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லை என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எந்த கட்சியையும் சாராத பொது வழக்கறிஞரான ராமச்சந்திரன் என்பவர் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கை மேலும் விசாரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியிருந்தார். கலவரத்தின் போது மோடி தலைமையிலான அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கலவரத்தை தடுக்க போலீசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த தகவலை அங்குள்ள ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்-ன் கருத்து தெளிவுப்படுத்துகிறது. அவருடைய கருத்தை புறக்கணிக்க இயலாது எனவும் கூறியிருந்தார்.

முன்னதாக, நரேந்திர மோடிக்கு இந்த கலவர வழக்கில் பங்கில்லை என சிறப்பு புலனாய்வு குழு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமச்சந்திரன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக