செவ்வாய், 1 மே, 2012

மின் சாதன கழிவுகளை அகற்றும் நடைமுறைகள் இன்று முதல் அமல்



மின் சாதன கழிவுகளை அகற்றும் நடைமுறைகள் இன்று முதல் அமல்தற்போது சுற்றுச்சூழல் பல்வேறு வகைகளில் மாசுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மின் சாதன பொருட்களின் அபரிமிதமான உபயோகத்தால் அவைகளை சுற்றுபுறத்திலிருந்து அகற்றுவது என்பது தற்போது சவாலாக இருந்து வருகிறது.


இந்நிலையில் மின் சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் மேலாண்மைக்கான நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு கழகம் அறிவித்துள்ளது.

இந்த வரைமுறையின் படி திரும்ப உபயோகிக்கும் வகையிலான மின் சாதனபொருட்களை தயாரிக்க ஊக்குவிக்கப்படும் எனவும் இது குறைந்து வரும் இயற்கை வளத்தை பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் சாதனக் கழிவுகளை அகற்றுவதில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே மின் சாதன கழிவுகளை சேகரிக்கும் அல்லது திரும்ப பெறும் நிலையங்களை அமைக்க வேண்டும் எனவும், கம்பெனிகளின் வரைமுறைக்குட்பட்டு மின் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களே கழிவுகளை அகற்றுவது குறித்தான நடைமுறை சாத்தியங்களை முடிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதமே இந்த வரைமுறைகள் குறித்து கம்பெனி பங்குதாரர்கள் அறிந்து கொண்டு, தாங்களை அதற்க்கு தயார் படுத்திகொள்ளும் வகையில் வெளியிட்டிருந்ததாகவும், தற்போது இது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக