
கணக்கு முடிப்பு, மகாவீரர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி என மூன்று நாட்கள், வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அமைந்தன. இந்த தொடர் விடுமுறையால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவிற்கு ஈடுசெய்ய, 7ம் தேதி, பொதுத்துறை வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளையும் முழுநேரம் இயக்க, வங்கி நிர்வாகங்களை, நிதி அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு ரிசர்வ் வங்கி மூலம், அனைத்து வங்கி நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், சனிக்கிழமையில் வழக்கமாக, காலை 10 முதல், மதியம் 2 மணி வரை தான் வங்கிகள் செயல்படும். தற்போது தொடர் விடுமுறையால் பொதுத்துறை வங்கிகள் உட்பட, அனைத்து வங்கிகளும், காலை 10 முதல் மாலை 5 மணி வரை, முழு நேரம் செயல்படும் என கூறப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக