வாட் வரியை ரத்து செய்ய கோரி புதுச்சேரியில் இன்று 4 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமைத்த உணவுகளுக்கான வாட் வரியை 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தினார் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி.
இதற்கு ஓட்டல்கள், ரெஸ்ட்டாரெண்டு, ஸ்வீட் ஸ்டால், பேக்கரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதன்படி இன்று காலை 6 மணிக்கு கடை அடைப்பு போராட்டம் தொடங்கியது. சிறிய, நடுத்தர மற்றும் உயர்தர ஓட்டல்கள் அனைத்தும் திறக்கப்படவில்லை. இந்த கடை அடைப்பு போராட்டம் நாளை காலை 6 மணி வரை தொடர்கிறது.
கடையடைப்பால் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக