
மார்ச் 1, 2002 அன்று 2000 நபர்களை கொண்ட கும்பல் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஒடி கிராமத்தில் முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடத்திய போது அதிலிருந்து தப்பிக்க ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்த போது அவ்வீட்டை தீ வைத்து கொளுத்தியதில் அவ் வீட்டில் தஞ்சம் புகுந்த 23 நபர்களும் தீயில் கருகி இறந்தனர். இறந்தவர்களில் பெரும்பான்மையினோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவோர். 23 நபர்களில் வெறும் 2 நபர்களின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
இக்கலவரம் நடந்த அன்று விவசாயத்துக்கு சென்றதால் உயிர் பிழைத்த மஜீத் " விவசாயம் முடித்து வீடு திரும்பிய போது வீடு முழுமையும் தீயில் எரிந்தது. வீடு வெளிப்புறம் தாளிழடப்பட்டு இறந்தது. வீட்டை உடைத்து செல்லும் முன் எல்லாம் முடிந்து விட்டது" என்று கூறினார். மஜீத் தன் குடும்பத்தில் 13 நபர்களை அச்சம்பவத்தில் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் தன் மனைவி மற்றும் குழந்தையை இழந்த ஷபிக், 13 குடும்ப உறுப்பினர்களை இழந்த மஜித் உள்ளிட்ட யாரும் தங்கள் கிராமத்துக்கு திரும்ப துணியவில்லை.
எல்லா உறவுகளையும் இழந்ததோடு, வீடு மற்றும் பொருளாதரத்தை இழந்ததோடு அண்டை வீட்டாரின் மீதான நம்பிக்கையும் இழந்ததால் சொந்த கிராமத்துக்கு திரும்ப விரும்பவில்லை என்று காரணம் கூறுகின்றனர். 10 வருடங்கள் கழித்து தீர்ப்பு கூறியிருந்தாலும் அவர்களுக்கான தண்டனை விவரங்கள் பிறிதொரு நாளில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக