புதன், 18 ஏப்ரல், 2012

டெல்லி மாநகராட்சி : 16 வார்டுகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி!

டெல்லி மாநகராட்சி தேர்தலில், முஸ்லிம்கள், காங்கிரசின் நய வஞ்சகத்தனம், பாஜகவின் மத துவேஷம் என, சிக்கி தவித்த நிலையில்,
பலமான மாற்று கட்சி இல்லாததால், சமாஜ்வாடி, பி.எஸ்.பி, ஆர்.எல்.டி போன்ற உதிரி கட்சிகளுக்கு, வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலம் முஸ்லிம் வோட்டுக்கள் மூன்றாக பிரிந்த போதும், கடந்த மாநகராட்சியில் 11 உறுப்பினராக இருந்த முஸ்லிம் கவுன்சிலர்கள் எண்ணிக்கை, தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. எனினும், பரவலாக எல்லா இடங்களிலும் உள்ள முஸ்லிம்கள், தொடர்ந்து காங்கிரசுக்கே வாக்களித்து வந்துள்ளனர். எனவே தான் டெல்லியில் உள்ள, 7 பாராளுமன்றத்தொகுதிகளில் ஒன்றில் கூட பாஜக, வரமுடியவில்லை. மொத்தமுள்ள 7 தொகுதளிலும் காங்கிரஸ் தான் வெற்றி பெற முடிந்தது. டெல்லியில் பாட்லா ஹவுஸ், போலி என்கவுண்டர் போன்ற விஷயங்களில், உறுதியான நடவடிக்கை எடுக்காமல், முஸ்லிம்களிடம் நயவஞ்சகமாக நடந்து வருவதால், முஸ்லிம் வாக்காளர்கள் காங்கிரசை விட்டு விலகி நிற்க வேண்டிய நிலை உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக